அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நெருப்பு கோளமான விமானம்: மொத்த பயணிகளும் பலி

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மோதி விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 பேர்கள் உடல் கருகி பலி
கொலம்பியாவின் மெடலின் என்ற பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 8 பேர்கள் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெடலின் பகுதியில் உள்ள Olaya Herrera விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானமானது Pizarro பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர்.
இயந்திர கோளாறு
விபத்தையடுத்து அனைவரும் பலியாகியுள்ளதாக நகர மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
மேலும், விமானம் மோதியதும் மூன்று துண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானம் மோதியத்தில் 7 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு உரிய உதவிகளும் மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிட்டுள்ளதாக நகர மேயர் உறுதி அளித்துள்ளார்.