அமெரிக்காவில் 63 வயது ஆணின் பிறப்புறுப்பில் வளர்ந்த எலும்பு!
அமெரிக்காவில் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த 63 வயதான மனிதருக்கு அதிர்ச்சியளிக்கும் நோயறிதல் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 63 வயதான மனிதர் ஒருவர் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக பெனிலின் ஓசிஃபிகேஷன்(penile ossification) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தார்.
இதில், ஆணின் பிறப்புறுப்பில் கடினமான எலும்பு போன்ற அமைப்பு உருவாகும், இந்த அரிய நிலை இடுப்பு எக்ஸ்ரே பரிசோதனையின் போது கண்டறியப்பட்டது.
மருத்துவ தரவுகளின் படி, பெனிலின் ஓசிஃபிகேஷன் என்பது அரிதான நிகழ்வு, 40க்கும் குறைவான வழக்குகள் இதுவரை அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
இது பெய்ரோனி நோய், காயம் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகள் போன்ற பிற நிலைகளுடன் தொடர்புடையது.
மேலும், பெனிலின் ஆஸிஃபிகேஷனின் தீவிரத்தன்மை மற்றும் அறிகுறிகளின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை நிலை மாறுபடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் வெளியேற்றம் அல்லது வீக்கம் போன்ற வழக்கமான எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை.
அத்துடன் நோயறிதல் பெற்ற பிறகு பாதிக்கப்பட்ட நபர் மேலதிக பரிசோதனைகள் அல்லது சிகிச்சையை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.