இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்த சவுதி அரேபியா!

November 20, 2023 at 7:46 pm
pc

சவுதி அரேபியா இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டறிந்துள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கில் Empty Quarter பகுதியில் அல்-ஹிரான் மற்றும் அல்-மஹாகிக் ஆகிய இரண்டு புதிய இயற்கை எரிவாயு வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வூதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசிஸ் பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சவூதி அராம்கோ (Saudi Aramco) எனப்படும் சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் அல்-ஹிரான்-1 கிணற்றில் உள்ள ஹனிஃபா நீர்த்தேக்கத்தில் முதல் கண்டுபிடிப்பை மேற்கொண்டதாக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது கண்டுபிடிப்பான அல்-மஹாகெக்-2 கிணற்றில் ஒரு நாளைக்கு 0.85 மில்லியன் scf என்ற அளவில் இயற்கை எரிவாயு பாய்ந்தது.கூடுதலாக, முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வயல்களில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களிலும் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, 2021-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் அதன் எரிவாயு உற்பத்தியை 50 சதவிகிதம் உயர்த்த இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை அடைய புதிய எரிவாயு வயல்களின் கண்டுபிடிப்பு உதவும் என்று சவுதி அரசாங்கம் கருதுகிறது.எரிசக்தி அமைச்சகம் 2030-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுத் தேவைகளுக்கான எரிவாயுவை முழுமையாகக் கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website