ஏழை மக்களின் பணத்தை ஏலச்சீட்டு போட்டு ரூ.3 கோடி ரூபாயை ஏமாத்திய அரசு பள்ளி ஆசிரியர்…தவிக்கும் மக்கள்
தருமபுரி மாவட்டம், தோக்கம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவர் பாப்பாரபட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
ஆசிரியர் முனியப்பனுடன் திருமல்வாடியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கலாராண என்பவரும் கூட்டு சேர்ந்துள்ளார். இவர்கள் அரசுப்பள்ளிக்கு செல்லும் போது நான்கு பேரை பணிக்கு அமர்த்தி சீட்டு பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.
இவர்களிடம் சிறு தொழில் செய்து வரும் நடுத்தர மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக சீட்டு ஒழுங்காக நடக்காததால் சீட்டு போட்ட மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், ஆரியர்களை தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் முறையான தகவல் வராததால் சீட்டு பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி பாதிக்கப்பட்ட மக்கள் ஆசிரியர் முனிப்பனிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியர் சீட்டு பணத்தை உங்களிடம் வசூல் செய்தவர்கள் ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி உள்ளனர். இதனால் சீட்டுபோட்டவர்கள் அதிர்சியடைந்தனர்.
திருமண செலவு மற்றும் தொழில் தொடங்கவும், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம், மருத்துவ செலவு என பல்வேறு காரணங்களுக்காக சீட்டு பணத்தை நம்பியிருந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஆசிரியர்கள் முனியப்பன் மற்றும் கலாராணி மீது நடவடிக்கை எடுப்பதோடு, பணத்தை மீட்டுக்கொடுக்கும் படி தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆசிரியர் படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலை கிடைக்காமல் பலர் குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனங்களிலும் பெயிண்டர் பணிகளுக்கு சென்று பணி செய்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணி செய்து வரும் பலர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பள்ளிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கந்துவட்டி விடுவதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும், ஏலசீட்டு நடத்தும் தொழில் செய்தும், தனியாக பள்ளிகள் நடந்துவதும் என பல்வேறு தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கல்விதுறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு இது போன்ற தொழில் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்று சீட்டு மற்றும் கந்துவிட்டி விட்டு தொழில் செய்பவர்களை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.