ஓடும் பஸ்சில் அரங்கேறிய அநியாயம்..வாயில் துணிவைத்து அடைத்து பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டுனர்..

திங்கள் கிழமை (ஜூலை 29) தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் பகுதிக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணித்த 26 வயது பெண்ணை, அந்த பேருந்தில் பயணித்த இரண்டு ஓட்டுனர்களில் ஒருவர், பயணிகள் அனைவரும் இருக்கும்போதே வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்துள்ளார். பெண் அளித்த புகாரின்பேரில் பஸ்ஸை வழிமறித்த போலீசார் தப்பிச்சென்ற ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.