கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து:எதிர்பார்க்காதவகையில் தோல்வி அடைந்த அர்ஜென்டினா அணி!!ரசிகர்கள் அதிர்ச்சி…

November 22, 2022 at 8:02 pm
pc

மெஸ்ஸி கோல் அடித்து அசத்தல்

தொடர்ந்து 36 ஆட்டங்கள் வெற்றிவாகை சூடிய அர்ஜென்டினா அணி எவரும் எதிர்பார்க்காதவகையில் சவுதி அரேபியாவிடம் சரணடைந்துள்ளது. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடியும் கோல் வாய்ப்பு அமையவில்லை.

சவுதி அரேபியா அதிரடி

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணியின் எதிர்பாராத தோல்வி அந்த அணியின் மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website