கள்ளக்காதலனுடன் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி!! பரிதவிக்கும் கணவன் குழந்தைகள் ..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி, அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சரஸ்வதிக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த செந்தில்குமார் மாலை நேரத்தில் தனது மனைவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். கதவை உறவினர்கள் தொடர்ந்து தட்டியும், வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, திருத்தங்கல் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த திருத்தங்கள் நகர் காவல் நிலைய போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரஸ்வதி மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலால் இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில், இரண்டு பேரின் குடும்பமும் குழந்தைகளும் தற்பொழுது நிற்கதியாக நிற்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.