காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!
பாலக்கோடு அருகே காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-கல்லூரி மாணவிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் லலிதா (வயது19). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த தமிழ்செல்வனின் பெற்றோர் மாணவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு உள்ளனர்.
ஆனால் மாணவியின் பெற்றோர் மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை. படிப்பு முடியட்டும் பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் மாணவி, காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி லலிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணைஇதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.