கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த அதானி

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கேரள அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘X’ தளத்தில், “வயநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வருந்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அதானி குழுமம் கேரளாவிற்கு உறுதுணையாக நிற்கிறது. கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடையுடன் எங்களது ஆதரவையும் வழங்குகிறோம்” என பதிவிட்டுள்ளார்.