கை, கால்கள் செயலிழந்த நிலையில் பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் கொமடி மற்றும் சண்டை காட்சிகளில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் கை மற்றும் கால் செயலிழந்து அவதிப்படும் நிலையில், உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் தான் காமெடி நடிகர் வெங்கல்ராவ். இவர் கடந்த மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது இவரது ஒரு கை மற்றும் கால் செயலிழந்து இருப்பதாக கூறப்படுவதுடன், மருத்துவ சிகிச்சைக்கு பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
மேலும் சே முடியாமலும் தவிக்கும் இவர் தனது மருத்துவ செலவிற்கு பண உதவி கேட்டு சினிமா கலைஞர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
வடிவேலு உடன் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்தவர் ஆவார்.
ஆரம்பத்தில் ஃபைட் யூனிட்டில் பணி செய்த இவர் பின்பு வடிவேலு உடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தனது சொந்த ஊரான விஜயவாடாவில் இருக்கும் வெங்கல்ராவ் தனக்கு உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.