சர்க்கரை நோயாளிகள் அவரைக்காய் சாப்பிட்டால் இந்த 7 நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?

December 3, 2022 at 7:25 am
pc

நமது வீடுகளில் சமைக்கப்படும் மணமணக்கும் சாம்பார்களில் நீல நீளமாக மிதந்து கொண்டிருக்கும் அவரைக்காய்களை வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட்டிருப்பீர்கள். அவரை பொரியல், கூட்டு, அவரை பட்டாணி என வித விதமான வடிவங்களில் கூட சாப்பிட்டிருக்கலாம். அதன் சுவைக்கு ஏற்றவாறே அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய பண்புகளும் நிறைந்து கிடக்கிறது தெரியுமா?
ஒரே ஒரு கப் அவரையில் அயர்ன், காப்பர், ஜின்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, கால்சியம் என ஒரு ஊட்டச்சத்து பட்டாளமே ஒளிந்து கொண்டிருக்கிறது.அது மட்டுமின்றி மூளை, இதயம், ஜீரணம், புற்றுநோய் பாதுகாப்பு, ஈறுகள் ஆரோக்கியம், மனநிலை மாற்றம், எனர்ஜி பூஸ்டர் என எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே வைத்துள்ளது இந்த பீன்ஸ் வகை தாவரம்.

அவரைக்காயின் ஊட்டச்சத்துக்கள் :

முன்னமே சொன்னது போல் ஒரு ஊட்டச்சத்து கூட்டமே இதில் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த இந்த உணவில் உங்கள் இதயத்தை பாதுகாக்கும் ஃபிளவனாய்டு வகைகளும் உள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து, ஃபோலேட் , நியாசின், பைரிடாக்சின், ரிபோபிளவின், தைமின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், காப்பர், அயர்ன், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம், ஜின்க் உள்ளிட்ட ஊட்டச்சத்து குடும்பமே உள்ளது.
இது ஆப்பிரிக்காவில் பிறந்து தற்போது உலக மூலம் பரவிக்கிடக்கிறது. டார்க் பர்ப்பில் நிறத்திலும் பச்சை நிறத்திலும் அதிகமாக நமது ஊரில் கிடைக்கிறது. இதற்குள் இருக்கும் பட்டாணி வடிவில் காணப்படும் இதன் விதைதான் முக்கியமானது. இதன் ஆரோக்கிய நலன்கள் உங்களின் பல உறுப்புகளுக்கு உதவுகிறது.

​இதய ஆரோக்கியம் :

சமீபத்திய ஆய்வுகள் உட்பட பல ஆய்வுகளின் படி பிளவனாய்டுகள் நிறைந்த உணவுகள் உங்கள் இதயதை மாரடைப்பு உள்ளிட்ட பல விதமான இதய கோளாறுகளில் இருந்து பாதுகாப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அதே போல் ஆரோக்கியமான வென்ட்ரிகிள் செயல்பாட்டை உறுதிப்படுத்த வைட்டமின் B1 அவசியம்.

முக்கியமாக வைட்டமின் B1 நரம்புகளில் இருந்து தசைகளுக்கு தகவல்களை பரிமாறும் அசிட்டைல்கொலின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த சிக்னல்கள் இல்லாமல் இதயத்தால் ஒழுங்காக இயங்க முடியாது.

​மூளை ஆரோக்கியம் :

உங்கள் மனநிலை மற்றும் கவனங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்களான டோபமைன்உள்ளிட்ட ஹார்மோன்களுக்கு காப்பர் அவசியமானது.காப்பர் குறைவாக இருந்தால் அது இந்த ஹார்மோன்களை பாதித்து உங்கள் மனநிலையை மோசமாக்கும்.

கவன சிதறல், சிந்திக்கும் திறன் பாதிப்பு, வளர்ச்சிதை மாற்ற குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 100 கிராம் அவரைக்காயில் 1.335 மைக்ரோகிராம் காப்பர் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் ஃபிரீ ரேடிக்கல்ஷால் ஏற்படும் சேதங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். அதே போல், நரம்பு சிதைவு நோய், புற்றுநோய் அபாயத்தை குறைப்பது என நிறைய நல்லது செய்கிறது.
மேலும் இதில் காணப்படும் அமினோ அமிலம் உங்களின் மனநிலையை , மனஅழுத்தம் , ஏன்சைட்டி ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்களை நிர்வகிக்கின்றன.

​ஜீரண ஆரோக்கியம் :

ஜீரண ஆரோக்கியத்தில் நார்ச்சத்துக்கு அதிக பங்குள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இது மலத்தை வேகமாக ஆரோக்கியமாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் குடல் செயல்பாடுகளில் பிரச்சனை, வீக்கம், மலச்சிக்கல், அஜீரணம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் ஏற்படமால் பார்த்துக்கொள்கிறது. 100 கிராம் வரையில் 25.6 மைக்ரோகிராம் டயட்ரி ஃபைபர் உள்ளது.

​ஈறுகள் ஆரோக்கியம் :

பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், பாஸ்பரஸ் மிக அவசியம்.அவற்றோடு உடலின் கால்சியம் அளவை தக்க வைத்து கொள்ள வைட்டமின் D அவசியம். அவரையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிரைந்துள்ளது.

இவை உங்களின் ஈறுகளின் உறுதி, பற்களின் உருவாக்கம், வலுவான பற்கள், தாடை எலும்பு அடர்த்தி உள்ளிட்டவற்றை பார்த்து கொள்ளும். 100 கிராம் அவரையில் 130 மைக்ரோகிராம் கால்சியம் மற்றும் 0.372 மைக்ரோகிராம் பாஸ்பரஸ் கிடைக்கிறது.

​புற்றுநோய் எதிர்ப்பு :

இதில் உள்ள ஜின்க் ஆன்டிஆக்ஸிடன்ட் கூறாகவும், அழற்சி எதிர்ப்பு பண்பாகவும் செயல்படுகிறது. எனவே, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் மற்றும் நோய் தடுப்பானாகவும் பயன்படுகிறது. இது உங்கள் செல்களின் ஆரோக்கியமான பிரிதலுக்கு ஆதரவாகவும், அவை பிறழ்வதற்கு எதிராகவும் இருக்கின்றன.

உடலில் புற்றுநோய் கட்டி வளர்வதையும் தடுக்கின்றன. உங்களின் உடல் நோயெதிர்ப்பு சக்தியை கூட இது மேம்படுத்துகிறது. 100 கிராம் வரையில் 9.33 மைக்ரோகிராம் ஜின்க் உள்ளது.
மேலும் ஜின்க் மற்றும் மாங்கனீசு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுவதால் உங்களின் நுரையீரல் சார்ந்த நோய்களும் கூட சரியாக இவை உதவுகின்றன.

​சர்க்கரை நோய் :

அவரை நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக தனது உணவில் இதை சேர்த்து கொள்ளலாம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும். குறிப்பாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு அவரைக்காய் பெரும் உதவி செய்கிறது. எனவே, உங்களின் தினசரி டயட்டில் இதை சேர்த்து கொள்வதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு உயராமல் பார்த்து கொள்ளலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website