சிவகார்த்திகேயன் போடும் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்!
சிவகார்த்திகேயன் இப்போது தான் சினிமாவில் தன்னுடைய அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் மாவீரன் படத்திற்கு அடுத்ததாக இப்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களையும் இப்போது கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் சினிமாவில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திய சம்பவம் தான் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையே ஏற்பட்ட பிரச்சனை. அதாவது சமீபத்தில் இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
இதைத்தொடர்ந்து இமான் மற்றும் அவரது மனைவி மோனிகா ரிச்சர்ட் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்பது போல ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதை அடுத்து சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டதை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். இமான் இப்படி ஒரு பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் தான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்று உணர்த்தும் விதமாகத்தான் சிவகார்த்திகேயன் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தில் பிரச்சனை வந்திருக்கும். ஆனால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை என்பது நீண்ட காலமாக போகாது. அவர்களும் சமாதானமாகி இருக்கக்கூடும். ஆகையால் வெளியுலகத்திற்கு ஓற்றுமையாக இருப்பது போல் காட்டுவதற்காகவே சிவகார்த்திகேயன் இவ்வாறு செய்துள்ளார் என பிஸ்மி கூறியிருக்கிறார்.