சிவகார்த்திகேயன் – முருகதாஸ் படத்திற்கு மாஸ் டைட்டில்!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆகிவிட்ட நிலையில், அதன் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படத்தை தொடங்கி இருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். SK 23 என தாற்காலிகமாக இந்த் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ருக்மிணி வசந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், இதன் டைட்டில் பற்றிய விவரம் கசிந்து இருக்கிறது. ‘சிங்கநடை’ என டைட்டில் வைக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவெடுத்து இருக்கிறாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.