ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து:ஜீவி அம்மா சொன்ன விஷயம்..
ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர். ரெய்ஹானா தனது புதிய இசை ஆல்பத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
“மாத்திக்கலாம் மாலை” என்கிற ஆல்பம் பாடலை ஏ.ஆர். ரெய்ஹானா இன்று வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். கடைசி நேரம் என்பதால் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் போன்ற பிரபலங்கள் பங்கேற்க முடியவில்லை எனக் கூறியிருந்தார் ரெய்ஹானா.
இந்த பாடலை வைத்து ரீல்ஸ் போடும் ஜோடியினருக்கு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்காக டிக்கெட்டுகள் பரிசாக கிடைக்கும் என்றும் கூறினார். அப்போது ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து தொடர்பான கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப அதற்கு ரெய்ஹானா அளித்துள்ள பதில் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை சிறு வயது முதலே காதலித்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக அறிவித்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அன்வி என்கிற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெய்ஹானா ஆர்ஜேவாகவும் பின்னணி பாடகியாகவும் உள்ள நிலையில், புதிதாக ஆல்பம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். “மாத்திக்கலாம் மாலை” என்கிற ஆல்பத்தை உருவாக்கிய அவர் இன்று நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
மாத்திக்கலாம் மாலை என்கிற காதல் ஜோடிகளின் பாடலை ஜி.வி. பிரகாஷ் அம்மா உருவாக்கியுள்ள நிலையில், உங்க வீட்டிலேயே நட்சத்திர ஜோடி பிரிந்து விட்டார்களே என்றும் சமீப காலமாக பிரபலங்கள் பிரிவது தானே டிரெண்டாக இருக்கிறதே ஏன்? என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது.
ரெய்ஹானா பதில்: அனைவரும் இணைந்து ஜோடியாக வாழத்தான் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், சிலருக்கு சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என பேசி சூழ்நிலை காரணமாகத்தான் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிந்தனர் எனக் கூறியுள்ளார்.