தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்…

October 6, 2022 at 8:46 am
pc

அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும், அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் – ஹரிஷ் கல்யாண் 

ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட அறிவிப்பில் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பியர் பிரேமா காதல் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ஸ்டார், டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் நர்மதா உதயகுமாரை என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது திருமணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் / பத்திரிகை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைக் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும், அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

தனது திருமணத்தை அறிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website