தினமும் காலை 5 மணிக்கு எழுந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

தினமும் காலை 5 மணிக்கு எழுந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இரவு சீக்கிரமாகவே தூங்கி விட்டு, அதிகாலையில் சீக்கிரமாக எழ வேண்டும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். நாம் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதால் சில மாற்றங்கள் நமது உடம்பில் நடக்கும். அது என்னென்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
காலை 5 மணிக்கு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் சிறப்பாக அமைவதுடன், காலையில் செய்யும் உடற்பயிற்சியானது உடல் எடையைக் குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
காலையில் 5 மணிக்கு எழுந்தால் தனிப்பட்ட வளர்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியுமாம். அதாவது பாடங்களை படிப்பது செய்தித்தாள் படிப்பது இவற்றின் மூலம் புத்தியும் கூர்மையாவதுடன், வாசிப்பு திறனும் மேம்படும்.
ஐந்து மணிக்கு தினமும் எழுந்துவிட்டால் 7 மணி முதல் 8 மணிக்கும் காலை உணவை சாப்பிட முடியும். காலையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.
முக்கியமாக இரவில் தூங்கும் முன்பு டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போதுமான தூக்கம் கிடைத்து ஆரோக்கியமாகவும் இருக்கமுடியும்.
இரவில் தாமதமாக தூங்குவதால் காலையிலும் தாமதமாக எழும்புவார்கள். இதனால் உணவையும் தாமதமாகவே சாப்பிடுவார்கள்… இதனால் உடல் பலவீனமாக மாறுமாம்.