பிரபல நடிகருக்கு வில்லனாகும் கமல்?

May 28, 2022 at 6:06 am
pc

கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகும் விக்ரம் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கமல் அடுத்த கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் பரவி வருகிறது. ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான் கமல் வில்லனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

கமல் ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் நடித்து, அது பாதியில் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படமும் நிச்சயம் தொடங்கும் என கமல் சமீபத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website