பெருங்காயம் தீர்க்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா …?

December 6, 2022 at 7:21 am
pc

ருசித்து சாப்பிடுவதை விட ஆரோக்கியத்திற்கு சாப்பிடுவதுதான் சிறந்தது என்று, நமது முன்னோர்கள் பலமுறை வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.முன்னோர்களின் உணவுமுறை இன்றைய ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய, நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய பொருள்களில் பெருங்காயமும் ஒன்று.


என்னதான் மணக்க மணக்க சமைத்தாலும் பெருங்காயம் சேர்த்தால் தான் ருசி கூடும் என்று சொல்வார்கள் ஆனால் அந்த பெருங்காயம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியம் தரும் என்கின்றது ஆய்வுகள் முடிவு.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது அவ்வப்போது காய்ச்சல் மற்றும் ஒரு சில உடல் உபாதைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் வராமல் தடுத்து வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய சக்தி பெருங்காயத்தில் உள்ளது.பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகின்றது.

வாயு :

குறிப்பாக சிலருக்கு நெஞ்சு எலும்பு முதுகு ஆகிய இடங்களில் வலி உண்டாகும். இது வாயுவால் உண்டாகும் வலியாகவும் இருக்கலாம். இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி பலம் சேர்க்கவும் பெருங்காயம் உதவுகின்றது.
கால் தேக்கரண்டி பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சர்க்கரை நோய் :

சர்க்கரையின் அளவ கட்டுக்குள் வைக்க உதவும். பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரப்பை சரி செய்வதன் மூலம் நோய் வருவதையும் தடுக்கும்.

கண் ஆரோக்கியம் :

பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின், நமது கண்களை பராமரிக்க உதவி புரியதோடு, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
பெருங்காயத்தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பிரகாசமாக தெரியும்.

பெண்கள் ஆரோக்கியம் :

மாதவிடாய் பிரச்சனை இருக்கின்ற பெண்கள், பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் அதிக ரத்தப்போக்கு ரத்தப்போக்கின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் கருப்பையில் நீர்க்கட்டி போன்ற உபாதைகள் உண்டாகாது.

நெஞ்சு சளி :

இளஞ்சூடான தண்ணீரில் பெருங்காயத்தை சேர்த்து குடிப்பதால் பெருங்காயத்தில் இருக்கும் வேதிப்பொருள், நுரையீரல் சுவாச மண்டலம் வழியாக மார்பு சளியை வெளியேற்றுகின்றது.
நெஞ்சு சளியை இயற்கையாக வெளியேற்றும் குணம் பெருங்காயத்திற்கு உண்டு.

வயிற்று பிரச்சனைகள் :

பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கலந்து குடிப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெறும்குடலுக்குள் இருக்கும் அனைத்து காயங்களையும் ஆற்றும் வலிமை பெருங்காயத்திற்கு உண்டு.


கால் தேக்கரண்டி பெருங்காயத்தை நீர்மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.மேலும் இந்த தண்ணீர் குடிப்பதால் அஜீரண பிரச்சனைகள் தீர்வது மட்டுமல்லாமல் அசிடிட்டி பிரச்சனையும் தீர்வாகும்.

இது நல்ல கால்சியத்தை அதிகரித்து எலும்புகள் வலிமை பெற வைக்கும். மேலும் இதன் ஆன்டி பாக்டிரியல் தன்மை, ஆஸ்துமா பிரச்சனை தீர்வளிக்கும்.இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.பெருங்காயத்தை சூடு நீரில் கலந்து குடிப்பதால், சரும நோய்கள் அனைத்தும் விளக்கும் என்று, ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது.
மற்றொரு ஆய்வு ஒன்றில் நுரையீரல் புற்றுநோய் செல் வளர்ச்சியை ஐம்பது வீரியத்திற்கும் மேலாக கட்டுப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.


நமது வீட்டு பெரியவர்கள் எதையும் சும்மா சொல்லி விட்டு போகவில்லை. ஆன்மீகமாக இருந்தாலும், அடுப்பங்கரையாக இருந்தாலும் எல்லாமே அறிவியலுடன் தொடர்பு கொண்டதே என்பதை அணைத்து ஆய்வுகளும் நிரூபித்து வருகின்றது.இதை உணர்ந்து கொண்டால் ஆரோக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

முக்கிய குறிப்பு

ஒரு முக்கிய குறிப்பு பெருங்காயத்தை கால் தேக்கரண்டி மட்டுமே தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
நோய்கள் விரைவாக தீர வேண்டும் என்று பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டை புண், கழிச்சல், வயிறு உப்புசம், சிறுநீர் எரிச்சல், புளியேப்பம் போன்றவை உண்டாகும்.


பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து நூறு மில்லி அளவுக்கு தினம் ஒருமுறை குடித்தால் போதும். அதிகபட்சம் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள். சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம் தான் கணக்கு.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website