பெரும் அதிர்ச்சி! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 33 பேர் பலி..!கொந்தளித்த விஜய்…



கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 33 பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
33 பேர்
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிப்பிக்கப்பட்டனர்.
அவர்களில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து அமைச்சர்களுடன் அவசர கூட்டம் நடத்த உள்ளார்.
விஜய் வேதனை
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் பலியானது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” ” என தெரிவித்துள்ளார்.