பொங்கல் சிறப்பு அப்டேட்: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள்

இன்னும் சில நாட்களில் பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 24 மணி நேரமும்
கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.
வரும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்
சென்றிட ஏதுவாக,
சென்னையிலிருந்து
11.01.2021, 12.01.2021 மற்றும் 13.01.2021
ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில்,
11ஆம் தேதி 2,226 பேருந்துகளும்,
12ஆம் தேதி 4,000 பேருந்துகளும்,
13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.”
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள்
பின்வரும் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து
நிலையம்
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு) 5. கே.கே. நகர் பேருந்து நிலையம்”
பொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்
இயக்கப்படும் இணைப்புப் பேருந்து நிலையம்.