மணிமேகலைக்கு ஆதரவாக குவியும் பிரபலங்கள்..!மற்றவர்களை அதிகாரப்படுத்தும் பிரியங்காவின் குணம் …
இன்று சோசியல் மீடியாவில் அதகளப்படுத்திய விஷயம் பிரியங்கா மூலம் மணிமேகலைக்கு நடந்த அநியாயம் தான். 15 வருஷமாக சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மணிமேகலையை அவமானப்படுத்தி, உனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது நான் சொல்வதை கேளு என்று அடிமைப்படுத்த நினைத்த பிரியங்காவிடமிருந்து பெரிய கும்பிடு போட்டு தப்பித்து விட்டார் மணிமேகலை.
பிரியங்கா பொருத்தவரை நம்மளால்தான் விஜய் டிவி ஓடுகிறது என்ற ஒரு நினைப்பு. அதனால எல்லா நிகழ்ச்சியிலும் மூக்கை நுழைத்து தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசுவதே வேலையாக வைத்திருக்கிறார். அவருக்கும் அந்த வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் நான் சொல்வது தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற ஒரு தெனாவெட்டு.
இப்படித்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது உள்ளே இருக்கும் போட்டியாளர்களை அடிமையாக்கி எனக்கு கீழ்ப்படிந்து இருந்தால் மட்டும்தான் உங்களால் ஜெயிக்க முடியும் என்பதற்கு ஏற்ப ஆட்டம் ஆடினார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அபிஷேக் இவர்களை கைவசம் வைத்து ராஜ்யம் செய்தார். பிறகு இவர்கள் வெளியே போன நிலையில் ராஜுக்கு நல்ல பெயர் இருக்கிறது என்று தெரிந்ததும் அவருக்கு சொம்பு தூக்கி பைனல் வரை பிரியங்கா நீடித்து வந்தார்.
தற்போது அதே தந்திரத்தை குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இர்பான் உடன் சேர்ந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து மற்றவர்களை மட்டம் தட்டிய வந்தார். அதிலும் ஜட்ஜ் ஆக வந்த செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இவர்களையும் அடக்கும் விதமாக ஓவராக குரலை எழுப்பி அவர்களை டம்மியாக்கி பிரியங்காவை பார்த்து பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை கொண்டு வந்தார்.
இதையெல்லாம் பார்த்து வந்த மணிமேகலை தெரியாத்தனமாக இந்த பிரியங்காவிடம் வந்து மாட்டிக்கிட்டுமோ என்று பல இடங்களில் புலம்பி இருக்கிறார். ஆனால் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில் தற்போது பொங்கி எழுமிதமாக உன் சகாசமே வேண்டாம் என்று கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பிரியங்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பலரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் இதில் கோமாளியாக கலந்து கொண்ட குரேஷியும், மணிமேகலைக்கு சப்போர்ட்டாக நீங்க எடுத்த முடிவு சரியாக தான் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து அடுத்த கட்ட லெவலுக்கு போவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதை நோக்கி பயணங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதே மாதிரி அனிதா சம்பத், இந்த மாதிரி துணிச்சலான முடிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு இடத்தில் நமக்கு மரியாதை இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகிக் கொள்வது நம்மளுடைய கவுரவத்திற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம். சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்று மணிமேகலைக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து சுசித்ரா, இதுவரை ஒரு எதிரிகளை கூட சம்பாதிக்க மணிமேகலை எந்த அளவுக்கு டார்ச்சர் இருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார்.
இதுதான் பிரியங்காவின் உண்மையான குணம் என்று சுசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியின் புகழும், இதுவரை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இதுதான் ரொம்பவே ஓஸ்ட்டான ஷோ என்று பிரியங்கா வந்தபோதே புரிந்து விட்டது. போட்டியாளர்களின் தனித்துவமே காணாமல் போய்விட்டது என்ற பல தடவை அவருடைய ரியாக்ஷன் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் போட்டு தான் சட்டம் விஜய் டிவி என்னுடைய கையில் தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஆடிய ஆட்டத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பிரியங்காவுக்கு எதிராக பதிலடி கொடுத்து மணிமேகலைக்கு சப்போர்ட்டாக ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள்.