மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு.. என்ன காரணம்?
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ’அமரன்’ திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ₹300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன், அவருடைய மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தனர்.இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டாடிய நிலையில், தற்போது அடுத்த கட்டமாக இந்த படத்தின் குழுவினர்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்த புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.