மனைவியின் கள்ள காதலை கண்டுபிடித்த கணவர்..,

January 15, 2021 at 9:46 am
pc

தமிழகத்தில் தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர்.

கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். இது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர். நவம்பர் 2-ஆம் தேதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின்
மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தேடிப்பார்த்த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் தேதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் காணவில்லை என புகார் அளித்தார். நவம்பர் 7-ஆம் தேதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துக்காளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் கலையரசியிடம் விசாரித்தபோது உண்மை வெளியே வந்தது. கலையரசி கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனைதீர்த்துக்கட்டிவிடலாம் என‌ முடிவுசெய்து தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கனவனை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார். கொலை சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திட்டம் போட்டு கணவனை கொன்ற கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அதன்படி, நீதிமன்ற காவலில் இருந்த கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website