மனைவியை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரன்!!பகீர் காரணம்…

June 27, 2022 at 2:46 pm
pc

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. இன்று அதேபோல இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் நாகரராஜன் மனைவியை கத்தியால் தலை, பின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொடூரமாக கொலை செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜன் கத்தியுடன் சரண் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை கம்மாபுரம் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்தனர். அதில், ராஜலட்சுமி நாகராஜை திருமணம் செய்வதற்கு முன்பு வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.

முதல் கணவன் இறந்துவிட்ட பின்னர் தாய் வீட்டில் வசித்து வந்த ராஜலட்சுமி இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார். நாகராஜ் அடிக்கடி ராஜலட்சுமியை சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பலமுறை ராஜலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விடுவாராம். இந்நிலையில், சம்பவத்தன்று சமாதானம் பேசி அழைத்து வந்த நாகராஜ் மனைவியை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததுடன் குத்தி கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website