மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி!

கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான 14 வயது தினேஷ் மற்றும் 8 வயது இன்பராஜும் ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இன்பராஜ் நீரில் மூழ்கிய நிலையில், அவனைக் காப்பாற்ற தினேஷ் தண்ணீரில் குதிதுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்