முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் மரணம்!!பிரதமர் மோடி இரங்கல்..


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் தனது 71வது வயதில் காலமாகியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்
PTI அறிக்கையின்படி, புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்திய பயிற்சியாளராகவும், தேசிய தேர்வாளராகவும் பணியாற்றிய கெய்க்வாட், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் ரத்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னதாக ஜூன் மாதம், BCCI கெய்க்வாட்டின் மருத்துவச் செலவுக்காக ரூ.1 கோடியை வழங்கியது. 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினர்.
அன்ஷுமான் கெய்க்வாட் முன்னாள் இந்திய கேப்டன் டி கே கெய்க்வாட்டின் மகன், அவர் 1959 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
கெய்க்வாட் 1975 மற்றும் 1987 க்கு இடையில் 40 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடினார்.
பிரதமர் மோடி இரங்கல்
தனது 71வது வயதில் காலமான இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.