வசீகரிக்கும் முகஅழகிற்கு குங்கும பூ பயன்படுத்தி பாருங்கள்…. நீங்களே ஆச்சரியப்படுவீங்க ….!!

May 28, 2022 at 10:22 am
pc

சிகப்பழகை பெறத்துடிக்கும் பெண்கள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை முக அழகிற்கு எப்படி பயன்படுத்துவது பற்றி சில டிப்ஸ்.
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர உதடுகள் நிறம் மாறும்.

உதடுகளில் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணெய் கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான், அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடத்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுகள் பால் விட்டு கலந்து குழைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படந்துள்ள கருமை நிறம் குறையும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website