வைரலாகும் விஜய் சேதுபதி -மஞ்சுவாரியர் போஸ்டர்!! விடுதலை -2 குவியும் ஏகப்பட்ட லைக்ஸ்




விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் சூரி கேரக்டருக்கு இயக்குனர் வெற்றிமாறன் முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையில், வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவாகவே இருக்கும்.
ஆனால் ’விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என்றும் குறிப்பாக விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள், அவர் ஏன் தீவிரவாதியாக மாறினார் என்பதற்கான காரணங்கள் இந்த படத்தில் உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்தார் என்பதும் அவரது காட்சிகளின் படப்பிடிப்பும் சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அதில் விஜய் சேதுபதியின் கையில் அரிவாள் வைத்துக் கொண்டிருக்கும் ஆவேசமான காட்சிகள், விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு லுக் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் இந்த பஸ்ல போஸ்டரில்
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இந்த குறளுக்கு நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர் என்று அர்த்தம்.
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், அட்டக்கத்தி தினேஷ், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல், இளவரசு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.