ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடைவிதித்த நகரம்

அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் நகரில் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு
ஸ்மார்ட்போன் பயன்பாடு பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் பல குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை விரும்புவதில்லை.
உலகளவில் 10 வயதுடைய குழந்தைகளில், ஐந்தில் 2 பங்கு குழந்தைகள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் யுனெஸ்கோ பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியது.
தடை விதித்த பெற்றோர்கள்
இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் உள்ள கிரேஸ்டோன்ஸ் எனும் நகரில், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்க வேண்டாம் என அவர்களின் பெற்றோர்களே முடிவெடுத்துள்ளனர்.
முன்னதாக, கிரேஸ்டோன்ஸில் உள்ள 8 பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது பள்ளியின் பெற்றோர் சங்கங்கள் தானாக முன்வந்து, தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்க மாட்டோம் என முடிவெடித்துள்ளனர்.
உலகில் 12 வயதுகளில் உள்ள 71 சதவீத குழந்தைகளும், 14 வயதில் இருப்பவர்களில் 91 சதவீத குழந்தைகளும் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் என்பது 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவு விபரம் என்பது குறிப்பிடத்தக்கது.