ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களா நீங்கள் …அப்போ இந்த பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருங்க …!!

January 9, 2023 at 6:37 am
pc

பரோட்டா, பன், சமோசா, பீட்சா, நூடுல்ஸ், பர்க்கர், குல்சா மற்றும் பல ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் இருக்கின்றன. பொதுவாக, இம்மாதிரியான உணவுகளில் நார்ச்சத்து என்பது இருக்காது. அதுமட்டுமல்லாமல், துரித உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காக அஜினோமோட்டோ மற்றும் சாயம் போன்ற வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கிறது. இப்போது இம்மாதிரியான துரித உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

துரித உணவுகளில் அதிக அளவு கொழுப்புகள் காணப்படுகின்றன, இது இதய பாதிப்பை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், சீக்கிரமாக உணவு கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதற்கு முக்கியம் காரணம் இம்மாதிரியான ஃபாஸ்ட்புட் உணவுகளும் சிக்கன் உணவுகளும் தான். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதால், பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கப்படுகிறது. இதனால் தான் பெண்கள் கூடிய விரைவில் பருவமடைந்து விடுகிறார்கள்.

வீட்டில் தயார் செய்யப்படும் உணவு வகைகளை விட கடைகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. இதனால், தொடர்ந்து எடுத்துக் கொள்வதனால் உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சிக் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியமாக இருந்தாக உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிப்படைந்து மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், ஞாபக சக்தி மற்றும் கவனக் குறைவு, தலைவலி மனச்சோர்வு,  உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக, இம்மாதிரியான பொருட்களை சாப்பிடுவதால் இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே, தினமும் ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து வந்தால் இம்மாதிரியான பிரச்சனைகளில் தப்பிக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website