அசத்தலான தெரக்கல்_குழம்பு சமைச்சி பாருங்க வீடே மணக்கும் :.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 3
உருளைக்கிழங்கு (பெரிதாக ) – 1
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
தாளிக்க – எண்ணெய், சோம்பு, மிளகு, பட்டை
அரைக்க:
பமிளகாய் – 4
கா மிளகாய் – 6
சோம்பு, சீரகம் – 1 தேக்கரண்டி
தேங்காய் – 1 மூடி
முந்திரிப்பருப்பு – 2
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்று ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு, நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வெந்ததும் இறக்கி பரிமாறவும்.