அசிங்கப்பட்டேன்!! நடிப்பதையே சுத்தமாக நிறுத்தியது ஏன்? – சிவகுமார் விளக்கம்!

August 29, 2024 at 9:28 am
pc

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பலரை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போதும் பட வாய்ப்புகள் கிடைக்க நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அப்படி 80களில் சிறந்த நடிகராக, அழகிய முருகராக என நடித்து முன்னணி நாயகனாக அவரது காலத்தில் வலம் வந்தவர் தான் சிவகுமார். இவரது பெயரை சொன்னதும் படங்களை தாண்டி அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி நியாபகம் வருவார்கள். அதன்பிறகு சிவகுமார் அவர்களை செல்பி எடுக்கும் போது அவர் செய்த சம்பவங்கள் தான்.

அண்மையில் நடிகர் சிவகுமார், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன், அப்பாவாக நடிக்கும் போது ரூ. 2 லட்சம்.

ஆனால் சீரியலில் எனக்கு பேட்டா, சம்பளம் எல்லாவற்றையும் கணக்கு பார்க்கும் போது மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேலே வந்தது. சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது பாசமலர் காட்சி வந்தது.

பாசமலர் படத்தில் கிளைமேக்ஸ் நடிக்க சிவாஜி கணேசன் தத்ரூபமாக வர வேண்டும் என்று 2 நாட்கள் இரவு தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தார். நானும் சீரியலுக்காக சாப்பிடாமல் தூங்காமல் அந்த காட்சியை நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு பெண் அவரது காதலருடன் போனில் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தது.

கோபத்துடன் உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு, இப்ப எதற்று சார் கத்துறீங்க, எப்படியும் இதை நீங்க டப்பிங் தான பேச போறீங்க என்று அலட்சியமாக பேசுனாங்க.

இதனால் நடிப்புக்கு மரியாதை இல்லை அதனால் எனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்று நான் அன்னைக்கு செருப்பால என்ன அடிச்சுகிட்டு இனி நான் மேக்கப் போட மாட்டேன்னு முடிவு எடுத்தேன்.

அதனால் தான் இப்ப வரைக்கும் நான் நடிக்கல என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website