அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இந்த 4 பிரபலங்களும் உறுதி.. வேற லெவல் தகவல்கள்..!




அஜித் நடிக்க இருக்கும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டு பைக் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜீத் விரைவில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, புனே, ஹைதராபாத் மற்றும் அபுதாபி ஆகிய பகுதிகளில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் த்ரிஷா முக்கிய கதாநாயகியாகவும் தமன்னா இரண்டாவது கதாநாயகியாகவும் நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளதாகவும் இது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் வில்லன்களாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது போக இந்த படத்தில் மெயின் வில்லன் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அவர் பிரபல ஹீரோவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.