அடர்த்தியான முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹாம் மேட் கற்றாழை ஆயில் ….!!

July 6, 2022 at 4:23 pm
pc

அடர்த்தியான முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹாம் மேட் கற்றாழை ஆயில் தயாரிக்க பெரிய கற்றாழை இலை இரண்டு மற்றும் 1/4லிட்டர் தேங்காய் எண்ணெய் மட்டும் போதுமானது .
இப்பொழுது கற்றாழையின் இலையை மட்டும் நீக்கி விட்டு ஜெல்லை எடுத்து கொள்ளவும் .
அதை 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு 3 நாட்கள் வரை ஊற வைக்கவும் .
பின்பு ஊறவைத்த கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் நன்கு கிளறி விட்டு சூடேற்றவும் .
ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வையுங்கள்
ஆறியதும் சூடேற்றி பாட்டலில் ஊற்றி சேமித்து வையுங்கள் .

பயன்படுத்தும் முறை

கற்றாழை எண்ணையை ஸ்கேல்பில் படும்படி நன்றாக தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் .

பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு அலசவும் .

இதை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை செய்து வர மயிர் கால்கள் ஊட்டம் பெரும் .

மேலும் தலையில் பொடுகு பிரச்சனை இருந்தாலும் நீங்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website