அட்டகாசமான சுவையில் கம்பு தயிர் சாதம் சமைக்கலாம் வாங்க …!!

தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்
தண்ணீர் – 5 கப்
பால் – ஒன்றரை கப்
தயிர் – ஒரு கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய்,
காய்ந்த மிளகாய் – தலா 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை,
உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.