அட்டகாசமான முட்டை கட்லெட் நீங்களும் சமைக்கலாம் வாங்க ….!!

June 13, 2022 at 8:22 am
pc

தேவையான பொருட்கள்:

  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 பெரியது
  • வேகவைத்த முட்டை – 5
  • பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
  • வெங்காயம் – 1 சிறிய அளவு பொடியாக நறுக்கியது
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 3/4 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
  • வறுத்த சீரகப் பொடி – 3/4 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
  • பிரட்தூள் – 1 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை – 1/2 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து துருவி கொள்ளவும். அதில் 5 வேக வைத்த முட்டைகளை பொடிபொடியாக நறுக்கி போடவும்.

நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இப்போது மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

வறுத்த சீரகப் பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்போது மசாலாவில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு பகுதியை எடுத்து நன்றாக தட்டவும். மசாலா ஒட்டும் தன்மையுள்ளதாக உணர்ந்தால், உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

எல்லா மசாலாவையும் கட்லட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு தட்டில் பிரட் தூளை எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது தட்டி வைத்த கட்லட் உருண்டைகளை ஒவ்வொன்றாக முதலில் முட்டையில் தோய்த்து, பின்னர் பிரட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது பிரட்டி எடுத்த கட்லட் உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற விடுங்க.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் போதுமான அளவு சூடானதும், கட்லட் உருண்டைகளை மெதுவாக போட்டு பொரித்துக் கொள்ளவும்.

குறைந்த தீயில் எல்லா பக்கமும் நன்றாக வேகும் படி அதை திருப்பி திருப்பி விடுங்க. இப்போது கட்லட் பொன்னிறமாக மாறியதும், எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுத்து வைக்கவும்.

இப்போது சூடான, சுவையான, மொறுமொறு முட்டை கட்லெட் தயார்…

இதை வீட்டில் தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸ் அல்லது மயோனைஸ் இருந்தால் அதில் தொட்டு சாப்பிடலாம். சுவை இன்னும் தூக்களாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website