அதிகமா முடி கொட்டுதா? அப்போ தைராய்டு டெஸ்ட் எடுத்து பாருங்க

August 6, 2023 at 10:48 am
pc

தைராய்டு என்பது கழுத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும், இது சீராக இல்லாத போது பல பிரச்சனைகள் ஏற்பட நேரிடலாம்.

உலகளவில் சுமார் 1-2 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுகின்றார்கள். இந்த பிரச்சினையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

ஆகவே இந்த நோய் உங்களுக்கு உள்ளதா என்று எப்படி தெரிந்துக்கொள்வது மற்றும் உணவுகளில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

பொதுவான அறிகுறிகள் 

  • கவலை 

  • கவனம் செலுத்துவதில் சிரமம் 

  • சோர்வு 

  • முடி கொட்டுதல் 

  • கை நடுக்கம் 

  • சகிப்புத்தன்மை

  • பசியின்மை
  • வியர்வை 

  • பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய்

  • நரம்புத் தளர்ச்சி

  • இதயத் துடிப்பு

  • ஓய்வின்மை 

  • தூக்க பிரச்சனைகள்

  • எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு 

  • அடிக்கடி மலம் கழித்தல் 

  • எண்ணெய் அல்லது வறண்ட சருமம்

இந்த பிரச்சினை உள்ளவர்கள் தங்களது உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் , விதைகள் மற்றும் துத்தநாகம் நிறைந்த பயறு, சுண்டல், பீன்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கடற்பாசி, மீன், பால் மற்றும் முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.

மேலும் இயற்கையான முறையில் குணமாக்க இந்த தேநீரை குடித்து பாருங்க.

அதிகமா முடி கொட்டுதா? தைராயட்டு டெஸ்ட் எடுத்து பாருங்க!


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website