அதிக சுவை நிறைந்த அட்டகாசமான பாதாம் பிசின் பாயசம் செய்யலாம் வாங்க…!!

December 18, 2022 at 12:41 pm
pc
தேவையான பொருட்கள்:

பாதாம் பிசின் துண்டுகள் – 6
பால் – ½ லிட்டர்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
காய்ந்த திராட்சை – 10
பாதாம் பருப்பு – 4
ஏலக்காய் – 2
வெல்லம் – 1 ½ கப்
சேமியா – 1 கப்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாதாம் பிசினை 6-8 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும். இதுவே 1 கப் அளவிற்கு ஜெல் போல் வரும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் சேமியா சேர்த்து நன்றாக வேக விடவும். பின்னர் ஏலக்காய் தட்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (வெல்ல சாறு நன்றாக ஆறிய பின்னர் சேர்க்கவும். இல்லையெனில் பால் திரிந்து போகும்). இதற்கிடையில் ஒரு தாளிப்பு கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி உலர் திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
இப்போது ஊறிய பாதாம் பிசின் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. வறுத்த முந்திரி கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. இப்போது ஆரோக்கியமான பாதாம் பிசின் பாயசம் ரெடி.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website