அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

November 9, 2022 at 12:38 pm
pc

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியான உயர்வை எட்டுவது வாடிக்கையாகிவிட்டது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,064 -க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4,758-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.456 உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,815க்கும், சவரன் ரூ.38,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.67.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website