அதிர்ச்சி !!வாலிபர்களை செல்போனில் அழைத்து உல்லாசமாக இருந்த சிறுமிகள்: 11 பேர் கைது!

July 2, 2023 at 9:55 am
pc

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் அருகே சிறுவர், சிறுமிகள் சிலர் சந்தேகப்படும்படியான செயல்களில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு கடந்த சில நாட்களாக புகார் வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியில் வசிக்கும் ஒருவர், புளியந்தோப்பு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 3 நாட்களாக எனது வீட்டில் தங்கி இருக்கும் தாம்பரத்தைச் சேர்ந்த எனது உறவுக்கார 17 வயது சிறுமி, நேற்று முன்தினம் நள்ளிரவு தாமதமாக வீட்டுக்கு வந்தார். அவரிடம் தாமதத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது தன்னை 2 பேர் கற்பழித்து விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிவர தாமதம் ஆனதாகவும் கூறினார்.

இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் அந்த 17 வயது சிறுமியை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் இது குறித்து விசாரிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோர் நேற்று அதிகாலை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று டாக்டர்களிடம் விசாரித்தனர். அப்போது டாக்டர்கள், அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறி, அடையாளங்கள் ஏதும் இல்லை. 

சிறுமி உடலில் நகக்கீரல், ஆடை கிழிப்பு, உடலில் காயங்கள் காணப்படவில்லை. ஆனால் அந்த சிறுமி ஏற்கனவே பலமுறை உடலுறவில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாம்பரத்தைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 18 வயது தோழியுடன் புளியந்தோப்பில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். 

இங்கு உறவினரின் 17 வயது மகளுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுடன் கடந்த 3 நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்தது ெதரிந்தது. இதுபோல் உல்லாசமாக இருந்துவிட்டு நள்ளிரவில் தாமதமாக வீட்டுக்கு வந்த சிறுமியிடம் அதற்கான காரணத்தை உறவினர் கேட்டதால் அவரை சமாளிக்க தன்னை 2 பேர் கற்பழித்து விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வர தாமதம் ஏற்பட்டதாகவும் பொய் சொல்லி சமாளித்ததும் தெரியவந்தது. 

சிறுமிகள் 3 பேரும் தங்களுக்கு தெரிந்த சிறுவர்கள், வாலிபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களாகவே போனில் அழைத்து உல்லாசமாக இருந்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 22), தனுஷ் (19), சஞ்சய் (21), மற்றொரு தனுஷ் (19), முத்துராமன் (21) மற்றும் 15, 17 வயதுடைய சிறுவர்கள் 6 பேர் என மொத்தம் 11 பேரையும் கைது செய்தனர். 

கைதான 11 பேரும் 3 சிறுமிகளுடன் கடந்த 3 நாட்கள் உல்லாசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி இவர்கள் 11 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான பாஸ்கர் உள்ளிட்ட 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். மற்ற 6 சிறுவர்களையும் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website