அந்தரத்தில் குதிக்கும் அமலாபால்.. லேட்டஸ்ட் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

July 24, 2023 at 6:51 am
pc

நடிகை அமலாபால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் சமூக வலைதளத்தில் எந்த பதிவும் செய்யாமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தான் அவர் மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள அமலாபாலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தருகின்றனர் என்பதும் அவரது பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் கையில் பூக்களுடன் அந்தரத்தில் குதிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு சுமார் ஒரு லட்சம் லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலாபால் ’அதோ அந்த பறவை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் பிருத்விராஜுடன் அவர் நடித்துள்ள ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த படமும் இவ்வாண்டு இறுதியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website