அனைவருக்கும் பிடித்த சுவையான ரோஜா பூ ஜாம்… இதை சேர்த்துக் கொண்டால் உடலில் இந்த பிரச்சனையே வராது…

June 5, 2022 at 7:30 am
pc

ஜாம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், வெறும் ஜாமாக சுவைப்பது என்பது அப்படி ஒரு சுவை. நாம் பெரும்பாலும் பழங்களால் ஆன ஃபுரூட் ஜாம் தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால், பூவில் இருந்து தயாரித்த ஜாம் சாப்பிட்டிருக்க வாய்ப்புகள் குறைவு தான். அந்த வகையில், இப்போது அனைவருக்கு பிடித்த் ரோஜா பூவை வைத்து ஒரு சுவையான ரோஜா பூ ஜாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரோஜா குல்கந்து

இந்த ரோஜா பூ ஜாமை “ரோஜா குல்கந்து” என்றும் அழைப்பதுண்டு. ரோஜா மலர்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், ஏராளமான நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இது ரொம்பவே நல்லது. என்ன தான் இருந்தாலும், ரோஜா மலர்களை அப்படியே சாப்பிட பலருக்கு பிடிப்பதில்லை. ஆனால், ரோஜா மலர்களை ஏதோ ஒரு உணவு பொருட்களில் பயன்படுத்தி அதன் சுவையை வேறுபடுத்தி கொடுக்கும்போது, அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

அதன்படி, இந்த ரோஜா மலர்களை அனைவரும் விரும்பும் ஜாமாக செய்து உடலுக்கு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • நாட்டு பன்னீர் ரோஜா இதழ்கள் – 11/2 கப்
  • சர்க்கரை – 3 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • எலுமிச்சை சாறு – 1/4 கப்
  • பெக்டின் – 50 கிராம்
  • ரோஸ் வாட்டர் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ரோஜா இதழ்களை முதலில் குளிர்ந்த தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்ரும் பெக்டின் சேர்த்துக் கலக்கிக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு, அடி கனமான பாத்திரத்தில், தண்ணீர், சர்க்கரை, பெக்டின் கலவை, மற்றும் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் சர்க்கரை முழுவதும் கரையும் வரை தொடர்ந்து கிளறி விடவும்.

இந்த பதத்தில் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து மேலும் 5-10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து இரண்டு முறை கிளறி விடுங்கள். இப்போது கலவை கெட்டியாக மாறத் தொடங்கும்.

அடுப்பில் இருந்து இறக்கி, ஜாமை சிறிது நேரம் குளிர்விக்கவும். பின்னர் ஈரமில்லாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் இதை ஊற்றி இறுக்கமாக மூடி பத்திரப்படுத்தவும். தற்போது சுவையான ஹெல்த்தியான ரோஸ் ஜாம் ரெடி…!!

இதை வெறும் ஜாமாகவும் சாப்பிடலாம் அல்லது பிரெட்டில் தடவியும் சாப்பிடலாம்.

இந்த ரோஜா ஜாமை இரண்டு மாதங்கள் வரை ஃபிரிட்ஜில் அல்லது 6 மாதங்கள் வரை ஃப்ரீசரில் வைத்தும் சேமிக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website