அன்னாசி பூவில் இவ்ளோ நன்மைகள் இருக்க …? என்னென்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க …!!

December 18, 2022 at 12:31 pm
pc

அண்ணாச்சி பூவானது வாசனைக்காகவும், செரிமானத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த அன்னாசி பூ சீனாவினை பூர்வீகமாக கொண்டு உள்ளது.
சீனாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது அனைத்து நாடுகளும் பரவி மிகவும் முக்கியமான ஒரு மசாலா பொருளாக மாறிவிட்டது.
அன்னாசி பூவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.


நட்சத்திர சோம்பு :

இந்த அன்னாசி பூவினை முதியவர்கள் நேரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரினை அருந்துகின்றனர்.
மேலும் நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய கரம் மசாலா போன்ற மசாலாக்களிலும் இந்த அன்னாசி பூவினை சேர்க்கின்றனர்.
நம் நாட்டில் மசாலா கொண்டு சமைக்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இந்த அன்னாசி பூ முக்கியமான ஒரு அங்கமாக மாறிவிட்டது.

அன்னாசி பூ எண்ணெய் :

இந்த அன்னாசி பூவில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமம் சார்ந்த அலர்ஜியினை சரி செய்ய உதவுகிறது.
நரம்புகளை வலுவாக்கவும் மற்றும் ரத்த ஓட்டத்தினை சீராக்கக்கூடிய ஆற்றல் இந்த அன்னாசி பூ என்னைக்கு உள்ளது.

வாயு பிரச்சனை :

இந்த அன்னாசி பூவானது சிறிது இனிப்பு சுவை கொண்டது. நாம் இந்த அன்னாசி பூவினை உணவில் சேர்த்து சமைப்பதன் மூலமாக இரண்டு வகையான ருசியை தருகிறது.
அது மட்டும் இல்லாமல் வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முழுமையாக குறைக்கின்றது. மேலும் நாம் அருந்திய உணவை எளிதில் செரிமானம் செய்வதற்கும் உதவியாக உள்ளது.
இந்தியாவில் 23 சதவீத மக்கள் செரிமான பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனைகளினால் அவஸ்தைப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை அவதிப்படுபவர்கள் அன்னாசி பூவினை சமையலில் பயன்படுத்தி வருவது அவர்களது பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

நரம்பு சார்ந்த பிரச்சினை :

நரம்பு சார்ந்த பிரச்சினைகள் அவதிப்படுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னாசி பூவினை கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயத்தினை கொடுக்கின்றனர்.
சீனா ரஷ்யா துருக்கி இது போன்ற நாடுகளில் செரிமானத்திற்காக அன்னாசி பூவானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
வாந்தி வலிப்பு குமட்டல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த, ஆரோக்கியத்தினை அதிகரிக்க அன்னாசி பூ பெரிதும் உதவியாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி :

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக அன்னாசி பூ உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய வைரஸ் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஈஸ்ட் இனங்களை கொல்லக்கூடிய பயோ ஆக்டிவ் பொருள் அடங்கியுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு பண்பினால் நமது உடலில் எந்த வித தொற்றுக்களும் ஏற்படாமல் நமது உடலினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த அன்னாசி பூவானது உதவுகின்றது.
அது மட்டும் இல்லாமல் நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை முழுவதுமாக உடலில் இருந்து வெளியேற்றி நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி என்னை பன் மடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாசிப்பூ.

சளி இருமல் :

சளி மற்றும் இருமல் பிரச்சினை அவதிப்படுபவர்கள் அன்னாசி பூவினை எடுத்து நன்றாக வறுத்து, அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அன்னாசிப்பூ பொடியை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ளவும் அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை என இருவேளைகளிலும் குடித்து வருவதன் மூலமாக சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் குணமாகும்.

தசை வலி :

அன்னாசி பூவினை நன்றாக வறுத்து அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும் .அன்னாசிப் பொடியுடன் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய இரண்டும் தலா 100 மில்லி அளவு எடுத்து சேர்த்து தைலமாக காய வைத்துக் கொள்ளவும்.
இந்த தைலத்தினை தசை வலி இருக்கக்கூடிய இடங்களில் மசாஜ் செய்து வருவதன் மூலமாக தசைவலி மற்றும் தசை பிடிப்பு குணமாகிறது.
மேலும் இந்த தைலத்தினை நெற்றியில் தேய்க்கும் பொழுது மனஇருக்கத்தினையும் சரி செய்கின்றது.

பெண்கள் ஆரோக்கியம் :
  • இந்த அன்னாசிப்பூ தாய்ப்பாலிணை அதிகரிக்க கூடிய அற்புத சக்தி கொண்டது. மேலும் மாதவிலக்கு பிரச்சனை போக்கக்கூடிய ஆற்றலும் இந்த அன்னாசி பூவுக்கு உள்ளது.
  • ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப நீர் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி பனைவெல்லம், வறுத்து பொடி செய்த அன்னாசிப்பூ அரை தேக்கரண்டி மற்றும் கால் தேக்கரண்டி பெருங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இதனை தினசரி காலை வேளையில் எடுத்துக் கொண்டு வருவதன் மூலமாக தடைப்பட்ட மாதவிலக்கு பிரச்சனை ஆனது குணமாகும்.
  • மேலும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பாலினை அதிகரிக்கவும் இது உதவுகிறது
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website