அமீரின் பிறந்தநாளில் காதலை சொன்ன பிக்பாஸ் பவானி – குவியும் வாழ்த்துக்கள்.!

July 16, 2022 at 3:46 pm
pc

அமீர் குறித்து பிக்பாஸ் பவானி பகிர்ந்துள்ள பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திகழ்ந்தவர் பவானி. ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றார். இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பெற்றார் பவானி.


பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிநய் உடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்தவர் பவானி. பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார் பாவனி. பிக்பாஸ் நிகழ்சிக்கு பின்னரும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினார்கள். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில் தற்போது இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக அமீர் பிறந்த நாளில் பாவனி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

அமீருடன் கட்டிபிடித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள பாவனி, பிறர் வாழ்வில் மகிழ்ச்சியை பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உங்களைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாக்கியம். நான் உங்களிடமிருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் நல்லது கெட்டது நேசித்ததற்கு நன்றி, தங்கமான இதயம் கொண்ட ஒரு மனிதன், நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன், லவ் யூ டா பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவின் மூலம் அமீருடனான தனது காதலை பாவனி உறுதி செய்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website