அமெரிக்காவில் 2 விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்!

January 16, 2023 at 5:38 pm
pc

சிறந்த திரைப்படங்களை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் வழங்கப்படும் ‘தி கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் 2 விருதுகளை ஆர்ஆர்ஆர் குவித்துள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இந்தப் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் இந்தியா பாடல் இதுவாகும்.

இந்நிலையில், 28-வது கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது. இந்த தகவலை ட்விட்டரில் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website