அமெரிக்கா-பிரித்தானியா இடையே புதிய ஒப்பந்தம்!

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான புதிய புரிந்துணர்வு திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் புதிய கூட்டுறவு திட்டத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளும் அறிவித்துள்ளன.
இவை 21ம் நூற்றாண்டுக்கான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான பொருளாதார கூட்டணிக்கான அட்லாண்டிக் பிரகடனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த புதிய கூட்டணி திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பான விநியோக தொடரை உருவாக்குதல் மற்றும் தந்திரோபாய சார்புகளை குறைத்தல், மற்றும் நாட்டின் எதிர்ப்பு பலத்தை உருவாக்குதல் போன்றவை மேம்படுத்தப்படும்.
மேலும் ஒரு புதிய பொருளாதார பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு கருவிகளில் தொடர்பான நெருக்கமான உறவை உருவாக்கப்படும்.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், இந்த திட்டம் எங்களது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழமாக ஆராய வழிவகை செய்யும், அதே நேரத்தில் இந்த திட்டம் இரு நாடுகளின் பாதுகாப்பு, அறிவியல், சுகாதாரம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றை பலப்படுத்தும் என தெரிவித்துள்ளது.