அமேசான் வேலையை உதறிவிட்டு… சொந்தமாக தொழில்: 37 வயதில் ரூ.110 கோடி சொத்து மதிப்பு

September 24, 2023 at 10:47 pm
pc

அமேசான் நிறுவனத்தில் பல லட்சங்கள் சம்பளமாக பெறும் வேலையில் இருந்தவர், அந்த வேலையை உதறிவிட்டு, தற்போது சொந்த தொழில் ஊடாக 30 வயதிலேயே கோடீஸ்வரராகியுள்ளார்.

ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்

அமேசான் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த அபூர்வா மேத்தா 2010ல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்துள்ளார். ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எந்த திட்டமும் அவரிடம் இருக்கவில்லை.

அமேசான் நிறுவனத்தில் பல லட்சங்கள் சம்பளமாக பெறும் வேலையில் இருந்தவர், அந்த வேலையை உதறிவிட்டு, தற்போது சொந்த தொழில் ஊடாக 30 வயதிலேயே கோடீஸ்வரராகியுள்ளார்.

ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறுவனம்

அமேசான் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த அபூர்வா மேத்தா 2010ல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்துள்ளார். ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எந்த திட்டமும் அவரிடம் இருக்கவில்லை

அதன் பின்னர் அமேசான் நிறுவனத்தில் இணைந்துள்ளார். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற வெறி மட்டும் அவருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் தான் தமது குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த அவர், அதில் எதுவுமே இல்லை என்பதை, தமது புதிய தொழில் முயற்சிக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

வட அமெரிக்க நகரங்களில் சேவை

மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மளிகைப் பொருட்கள் வாங்குவது தான். அதையே, இணையமூடாக வீட்டு வாசலில் விநியோகிக்க செயலி ஒன்றை உருவாக்கினார் அபூர்வா மேத்தா.

அதுவே Instacart நிறுவனமாக உருவானது. சான் பிரான்சிஸ்கோ பகுதியை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனமானது தற்போது 14,000 க்கும் மேற்பட்ட வட அமெரிக்க நகரங்களில் சேவைகளை வழங்குகிறது. 

இதுவரை 900 மில்லியன் வாடிக்கையாளர் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதுடன், 20 பில்லியன் பொருட்களை விநியோகம் செய்துள்ளது. மட்டுமின்றி, 80,000 கடைகளில் இருந்து மளிகைப் பொருட்களை இவரது Instacart நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

தனது நிறுவனத்தின் 700,000 பங்குகளை விற்பனை செய்துள்ள மேத்தா அதன் காரணமாக ரூ.110 கோடியை திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website