அரவிந்த்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

June 19, 2023 at 8:17 am
pc

ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அரவிந்த்சாமி, அன்று முதல் இன்று வரை ரசிகைகளுக்கு சாக்லேட் பாயாகவே தெரிகிறார். இவருக்கு 53 வயது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

அந்த அளவிற்கு இப்போதும் ஹாண்ட்சம் லுக்கில் இருக்கும் அரவிந்த்சாமியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அரவிந்த்சாமி திடீரென்று தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக கொடூரமான வில்லனாக கம்பேக் கொடுத்து மிரட்டினார்.

அதுமட்டுமல்ல சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த கஸ்டடி படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்திருப்பார். இவர் காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு 16 வருடம் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார், அதன் பிறகு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தையும் இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் என அரவிந்த்சாமிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் சினிமாவில் அதிகபட்சமாக தலைவி என்ற படத்தில் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்ததற்காக 3 கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு தன்னுடைய படங்களுக்கு ஏற்றவாறு சம்பளத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் அரவிந்த்சாமி இதுவரை சுமார் 160 கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

இவருக்கு சென்னையில் ஒரு அடுக்குமாடி வீடு உள்ளது. அதை தவிர முக்கியமான நகரங்களில் கோடிக்கணக்கில் நிலங்களை வாங்கி போட்டிருக்கிறாராம். சினிமா மட்டுமல்ல பிசினஸிலும் அரவிந்த்சாமி அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் சினிமா, பிசினஸ் என வருடத்திற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்.

இன்று அரவிந்த்சாமி தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் அரவிந்த்சாமிக்கு ஒட்டுமொத்தமாக 160 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதும் வைரலாக பேசப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website