அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

January 3, 2024 at 7:09 pm
pc

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சமீபத்தில் முடிவடைந்த ’லேபிள்’ என்ற வெப் தொடர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கடைசி எபிசோடில் இதுவரை எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான அதே சமயம் சர்ப்ரைஸ் ஆக விடை கொடுத்ததை அடுத்து பார்வையாளர்கள் திருப்தி அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ’லேபிள்’ கொடுத்த வெற்றியின் காரணமாக அடுத்த படத்தை உடனே அருண்ராஜா காமராஜ் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படம் குறித்த தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கசிந்த நிலையில் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்கள் பெரிய வெற்றி பெறாததால் தயாரிப்பாளர் கிடைக்காத நிலை இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘லேபிள்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முன் வந்துள்ளதாகவும் இதையடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ’பிரின்ஸ் – பிரின்ஸஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website