அறுசுவையான கொண்டக்கடலை வடை நீங்களும் சமைக்கலாம் வாங்க …!!

தேவையானவை:
கொண்டக்கடலை – கால் கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பச்சைமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
வாழைப்பூ – ஒன்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை :
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும்.
அதன்பின் கொண்டைக்கடலை கடலைப்பருப்பு இஞ்சி பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
வாழைப்பூவை சிறிதாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.பிறகு எடுத்து அரைத்து மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.